ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் ‘மெய்' பட ஃபர்ஸ்ட் லுக்!

news18
Updated: April 25, 2019, 8:14 PM IST
ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் ‘மெய்' பட ஃபர்ஸ்ட் லுக்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
news18
Updated: April 25, 2019, 8:14 PM IST
ஐஸ்வர்யா ராஜேஷின் ’மெய்’ பட ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

கமல்ஹாசன், பிரபல இயக்குநர் சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் ’மெய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சார்லி, கிஷோர் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படம் குறித்து இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறுகையில், “மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவ துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும். சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

படத்தின் ஹீரோ நிக்கி சுந்தரம், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். படத்துக்கு தேவையான வகையில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். கதை, கதாபாத்திரம் மற்றும் தன் நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலம் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதை மற்றும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு புதுமுக நாயகனுடன் இணைந்து நடிக்கிறார்.

வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.வீடியோ பார்க்க: அஜித்-லாரன்ஸ்: தொடரும் சுவாரஸ்ய சென்டிமெண்ட்


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...