விஜய் சேதுபதிக்கு 5-வது முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை!

விஜய் சேதுபதிக்கு 5-வது முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை!
நடிகர் விஜய்சேதுபதி
  • News18
  • Last Updated: June 2, 2019, 12:10 PM IST
  • Share this:
விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன், சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. மேலும் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம், தெலுங்கில் சயிர நரசிம்மரெட்டி, வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் சங்கத்தமிழன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Actress Aishwarya Rajesh

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கெனவே பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் 5-வது முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.வீடியோ பார்க்க: சூர்யா ஜெயித்த கதை!

First published: June 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading