மாலத்தீவில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ!

மாலத்தீவில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ!

ஐஸ்வர்யா ராஜேஷ்

மாலத்தீவை தேர்வு செய்ததற்கான காரணங்களில் ஒன்று சீபிளேன் (seaplane) என்றும் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் மாலத்தீவில் இருக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் விடுமுறையை கழிக்க தேர்ந்தெடுக்கும் ஸ்பாட்டாக மாலத்தீவு உள்ளது. சமீபத்தில் டிடி, விஷ்ணு விஷால், ரகுல் ப்ரீத் சிங் அங்கு சென்று தங்கள் விடுமுறையை கழித்தனர். இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

  அங்கிருந்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. மாலத்தீவில் கடல் மீது சிறிய ரக விமானத்தில் பயணிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், விடுமுறையை கழிக்க தான் மாலத்தீவை தேர்வு செய்ததற்கான காரணங்களில் ஒன்று சீபிளேன் (seaplane) என்றும் தெரிவித்துள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)


  அதோடு, 30 நிமிடம் சீபிளேனில் பயணித்தால் எப்படி இருக்கும். அங்கிருந்து மாலத்தீவை சுற்றி பார்ப்பது செமயாக உள்ளது. நான் கற்பனை செய்தபடி ஒர்த்தாக இருக்கிறது. இதற்கு ஏற்பாடு செய்த மாலத்தீவு போக்குவரத்திற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)


  இரவு உணவை சாப்பிடும் படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா, ”நிலவொளியின் கீழ் இரவு உணவு, மாலத்தீவு உணவு வகைகளை நான் ரசித்த ஒரு கனவு தருணம்” என்றும் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: