• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராணாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ராணாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

பீம்ல நாயக்குக்கு த்ரிவிக்ரம் திரைக்கதை எழுத, தமன் இசையமைக்கிறார். சாகர் கே.சந்திரா படத்தை இயக்குகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தெலுங்கில் தயாராகிவரும் பீம்ல நாயக் படத்தில் ராணா ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் பல படங்கள் நாயகியை மையப்படுத்தியவை. நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் விடுவதில்லை. கதாபாத்திரம் நன்றாக இருந்தால் நாயகியாக இல்லாவிட்டாலும் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் தயார். அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது சகோதரியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் நாயகி ராஷ்மிகா மந்தனா.

கதாபாத்திரம் நன்றாக இருந்தால் நடிக்க தயங்காத ஐஸ்வர்யா ராஜேஷ் பவன் கல்யாண், ராணா நடிக்கும் பீம்ல நாயக் படத்தில் ராணா ஜோடியாக நடிக்க மறுத்ததாக செய்திகள் கூறுகின்றன. பீம்ல நாயக் மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக். மலையாளத்தில் பிஷு மேனன் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், பிருத்விராஜ் நடித்த வேடத்தில் ராணாவும் நடிக்கின்றனர். இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மலையாளத்தில் இந்த வேடத்தை கௌரி நந்தா செய்திருந்தார். முக்கியமான பவர்ஃபுல் பெண் கதாபாத்திரம்.

Also read... விரைவில் இந்திப்பட உலகில் நுழையும் சமந்தா...!

அப்படியே பிருத்விராஜ்; பக்கம் வந்தால், படத்தில் அவரது மனைவியாக வருகிறவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சில காட்சிகளில் தலைகாட்டுவதோடு சரி. தெலுங்கில் இந்த வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை கேட்டிருக்கிறார்கள். எந்த முக்கியத்துவமும் இல்லாத வேடம் என்பதால் முடியாது என மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பீம்ல நாயக் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பவன் கல்யாண், ராணா நடிக்கும் படத்திலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க மறுத்துவிட்டார் என சில தெலுங்கு ஊடகங்கள் எழுதி வருகின்றன. அந்த வேடம் எந்த முக்கியத்துவமும் இல்லாதது என்பதை மட்டும் சொல்லாமல் மறைக்கிறார்கள்

பீம்ல நாயக்குக்கு த்ரிவிக்ரம் திரைக்கதை எழுத, தமன் இசையமைக்கிறார். சாகர் கே.சந்திரா படத்தை இயக்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: