• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Aishwarya Rajesh: கேக் வெட்டி குட்பை சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!

Aishwarya Rajesh: கேக் வெட்டி குட்பை சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து கேக் வெட்டினர்.

  • Share this:
    மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் பகுதிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேக் வெட்டி அவரை வழியனுப்பியது படக்குழு.

    விஷ்ணு விஷாலின் விவி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படங்களில் ஒன்று, மோகன்தாஸ். இந்தப் பெயரைக் கேட்டதும் அகிம்சையே நினைவுக்கு வரும். ஆனால், ஏப்ரல் 2020 வெளியிட்ட மோகன்தாஸ் டைட்டில் வீடியோவில், ரத்தம் தெறிக்க விஷ்ணு விஷால் ஒருவரை கொலை செய்வதை காட்டினார்கள். அதுவும் சுத்தியல் வைத்து. மே பி ஏ ட்ரூ ஸ்டோரி என்ற டேக் லைன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மோகன்தாஸில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் முடிவடைந்தன. படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து கேக் வெட்டினர். இந்த க்ரைம் த்ரில்லரை களவு பட இயக்குனர் கார்த்திக் இயக்குகிறார். சுந்தர மூர்த்தி இசையமைக்க, விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்த வருடம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: