• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Ayyappanum Koshiyum: அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ், நித்யா மேனன்!

Ayyappanum Koshiyum: அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ், நித்யா மேனன்!

நித்யா மேனன் 
 - ஐஸ்வர்யா ராஜேஷ்

நித்யா மேனன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

இதனை சாகர் கே.சந்திரா தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் ரீமேக் செய்கிறார்.

  • Share this:
    மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் முந்துகிறார்கள். வரும் 12-ஆம் தேதி தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்குகிறது. பவன் கல்யாணும், ராணாவும் இதில் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் மலையாளத்தில் கமர்ஷியல் ஹிட்டான படங்களில் ஒன்று அய்யப்பனும் கோஷியும். பிஜு மேனனும், பிருத்விராஜும் நடித்தது. தெனாவெட்டே திருவுருவாகக் கொண்ட கோஷியை, சட்டம் அனுமதித்ததைவிட அதிக மதுபானம் எடுத்துச் சென்றதற்காக இன்ஸ்பெக்டர் அய்யப்பன் கைது செய்கிறார். இமேஜ் டேமேஜான கோஷி தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அய்யப்பனுக்கு குடைச்சல் கொடுக்கிறார். அய்யப்பனை அழிப்பதே கோஷியின் ஒரே நோக்கம். பொறுத்துப் பார்த்த அய்யப்பன் தனது சுயரூபத்தை காட்டுகிறார். பிறகுதான், தான் சண்டைக்குச் சென்றது சாதாரண ஆளில்லை, ஒருகாலத்தில் நக்சலைட்டாக இருந்து, பலரை கொன்ற ஹைவால்டேஜ் கரண்ட் என்பது தெரிகிறது. இந்த இருவரது மோதலை சரவெடி திரைக்கதையில் படமாக்கியிருந்தார் சச்சி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனை சாகர் கே.சந்திரா தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் ரீமேக் செய்கிறார். தெலுங்குக்கு ஏற்றபடி கதை, திரைக்கதையில் த்ரிவிக்ரம் மாறுதல்கள் செய்துள்ளார். வரும் 12 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கயிருப்பதை முன்னிட்டு நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷை நாயகிகளாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அல்லு அர்ஜுனின் புஷ்பாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது சகோதரியாக நடித்துள்ளார். இப்போது இந்தப் படம்.

    எஸ் தமன் படத்துக்கு இசையமைக்கிறார். அய்யப்பனும் கோஷியும் படத்தில் யாருக்கும் டூயட் இல்லை. தெலுங்கில் எப்படியும் தலா இரண்டு டூயட்கள் வைப்பார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: