விக்ரம் வேதா இயக்குநருடன் கரம் கோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

விக்ரம் வேதா இயக்குநருடன் கரம் கோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
ஐஸ்வர்யா ராஜேஷ்.
  • Share this:
புஷ்கர் - காயத்ரி இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் விக்ரம் வேதா. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதனிடையே புஷ்கர் - காயத்ரி இருவரும் இணைந்து ஒரு வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டுள்ளனர். இதில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் நடிகர் கதிரும் இந்த வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்.


இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும், முன்னணி தொலைக்காட்சியிலும் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சத்யராஜ், அக்‌ஷய்குமார், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் வெப் தொடர்களில் நடித்து வரும் நிலையில் அந்தப் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளார்.

மேலும் படிக்க: தனுஷ் வருத்தப்பட்டார்: விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பவன்!
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்