வனப்பகுதியில் படமாக்கப்படும் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம்? டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..

ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
தமிழில் நல்ல கதையம்சங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வானம் கொட்டட்டும், வேர்ல்டு பேமஸ் லவ்வர் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பூமிகா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்பவர் இயக்குகிறார். கார்த்திக் சுப்புராஜ் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ராபர்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பளாராக ஆனந்த் பணிபுரிகிறார். மோஷன் போஸ்டரைப் பார்க்கையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காட்டுப்பகுதிகளில் நடத்தப்பட இருப்பதாக தெரிகிறது.இயக்குநர் ரதீந்திரன் ஏற்கெனவே ஐஸ்வர்யா ராஜேஷ், அபய் தியோல், அஸ்வின் உள்ளிட்டோரை வைத்து ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தை இயக்கினார். இன்னும் இத்திரைப்படம் திரைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: August 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading