Home /News /entertainment /

Aishwarya Rai: புதுச்சேரியில் ஐஸ்வர்யா ராய் மாஸ்டர் ராகவனுடன் எடுத்துக் கொண்ட படம் வைரல்

Aishwarya Rai: புதுச்சேரியில் ஐஸ்வர்யா ராய் மாஸ்டர் ராகவனுடன் எடுத்துக் கொண்ட படம் வைரல்

ஐஸ்வர்யா ராய் - மாஸ்டர் ராகவன்

ஐஸ்வர்யா ராய் - மாஸ்டர் ராகவன்

மாரி 2, பாஸ்கர் தி ராஸ்கல் படங்களில் நடித்த மாஸ்டர் ராகவன் இதில் சிறுவயது பாண்டிய மன்னனாக நடிக்கிறார்.

    புதுச்சேரியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் ஐஸ்வர்யா ராயுடன் மாஸ்டர் ராகவனும் கலந்து கொண்டுள்ளார். ஐஸ்வர்யா ராயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ராகவன் பகிர்ந்துள்ளார்.

    கல்கியின் பொன்னியின் செல்வனை மணிரத்னம் இரு பாகங்களாக எடுத்து வருகிறார். அவரது மெட்ராஸ் டாக்கீஸும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்பட ஏராளமானவர்கள் நடிக்கின்றனர். முதல் பாகத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கிறது. ஐஸ்வர்யா ராய் அதில் கலந்து கொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாரி 2, பாஸ்கர் தி ராஸ்கல் படங்களில் நடித்த மாஸ்டர் ராகவன் இதில் சிறுவயது பாண்டிய மன்னனாக நடிக்கிறார். பாண்டிய மன்னனின் காதலி நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதை ராகவன் உறுதி செய்துள்ளார். தனது காதலனை கொன்ற சோழ இளவரசனை பழிவாங்க, சோழர் படைத்தலைவரான பழுவேட்டரையரை திருமணம் செய்து, அரண்மனையில் இருந்து கொண்டே சதி செய்யும் வேடம். பெரிய பழுவேட்டரையராக பார்த்திபன் நடிப்பதாக கூறப்படுகிறது.

    பொன்னியின் செல்வன் வசனத்தை ஜெயமோகன் எழுதியுள்ளார். இசை ரஹ்மான். ரவிவர்மன் ஒளிப்பதிவில் பொன்னியின் செல்வன் வேகமாக தயாராகி வருகிறது. 2022 கோடையில் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் திரைக்கு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Aishwarya Rai, Ponniyin selvan

    அடுத்த செய்தி