Home /News /entertainment /

இணையத்தில் லீக்கான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள படங்கள்

இணையத்தில் லீக்கான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள படங்கள்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினியாக அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாக இருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் எடுத்துக் கொண்டப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வரலாற்று காவியமான இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் சமூக வலைதளங்கள் மூலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தற்போது, ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர்கள் விக்ரம், கார்த்தி எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. திரைப்பட குழுவினர் அந்தப் படங்களை பகிரவில்லை.

    யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?

    படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினியாக அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாக இருக்கிறார். நிறைய நகைகளுடன், பட்டுப் புடவையில் காட்சியளிக்கிறார். இப்படத்தில் நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. மேலும் இன்னொரு படத்தில் விக்ரமும், கார்த்தியும் குதிரை மேல் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தில், ஆதித்த கரிகாலன் மற்றும் வந்தியத்தேவனாக நடிக்கின்றனர். கசிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வாரிசு படப்பிடிப்பில் என்னை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்திட்டாங்க - குமுறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரவிச்சந்திரன்

    Ponniyin Selvan shooting spot pictures leaked online, Ponniyin Selvan aishwarya rai, maniratnam, mani ratnam ponniyin selvan, maniratnam ponniyin selvan release, மணிரத்னம், மணிரத்னம் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி, ponniyin selvan new poster, ponniyin selvan movie, ponniyin selvan jayam ravi, ponniyin selvan trisha, பொன்னியின் செல்வன் த்ரிஷா, பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி,
    பொன்னியின் செல்வன்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் இப்படத்தில் பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ரஹ்மான் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Aishwarya Rai, Ponniyin selvan

    அடுத்த செய்தி