முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Ajith Aishwarya Rai: அஜித்தின் ஏகே62 படத்தில் ஐஸ்வர்யா ராய்?

Ajith Aishwarya Rai: அஜித்தின் ஏகே62 படத்தில் ஐஸ்வர்யா ராய்?

அஜித் - ஐஸ்வர்யா ராய்

அஜித் - ஐஸ்வர்யா ராய்

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிப்பார் என்றும், இதுவே அஜித்தும் ஐஸ்வர்யாவும் ஜோடியாக நடிக்கும் முதல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித்தின் 62-வது படத்தின் நடிகை ஐஸ்வர்யா ராய் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நடிகர் அஜித்துக்கு சமூக வலைதள கணக்குகள் இல்லை என்றாலும், சமீபத்தில் இணையத்தில் வெளியாகும் அவரது புகைப்படங்கள் இணையவாசிகளிடம் லைக்ஸை குவித்து வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. அதன் பிறகு மீண்டும் இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து புதிய படத்தின் பணிகளை தொடங்கினார்.

அஜீத் தற்போது ‘ஏகே 61’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில், மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், செப்டம்பரில் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. ‘ஏகே 61’ படத்தைத் தொடர்ந்து அஜித், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் படத்தின் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அவரை அணுகி பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. எல்லாம் சரியாக நடந்தால், இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிப்பார் என்றும், இதுவே அஜித்தும் ஐஸ்வர்யாவும் ஜோடியாக நடிக்கும் முதல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்ததுள்ளனர். தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராயுடன் அஜித் மீண்டும் இணைவதற்கு ஏகே62 படம் வழி செய்யும்.

அட்லியின் ஜவான் படப்பிடிப்புக்கு குட் பை சொன்ன தீபிகா படுகோன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்தப் படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

First published:

Tags: Actor Ajith, Aishwarya Rai