Home /News /entertainment /

நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்? வெளியான வீடியோ!

நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்? வெளியான வீடியோ!

மகளுடன் ஐஸ்வர்யா ராய்

மகளுடன் ஐஸ்வர்யா ராய்

திரை வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அவரது சமீபத்திய வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

    மும்பை விமான நிலையத்திலிருந்து ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து அவர் கர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற செய்திகள் வெளியாகின. செவ்வாயன்று, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் அவர்களின் மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது தாய்-மகள் இருவரும் கறுப்பு நிறத்தில் உடையணிந்திருந்தனர்.

    ஐஸ்வர்யா தளர்வான கறுப்பு உடையிலும், அவரது மகள் ஆராத்யா கறுப்பு டிராக் சூட்டிலும் கைகோர்த்து நடந்தனர். அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. படு தளர்வான உடையில் இருந்த ஐஸ்வர்யா ராயைப் பார்த்து, அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இருப்பினும் இது குறித்த உண்மை என்னவென்று தெரியவில்லை.

    ரஜினிகாந்தின் தலையீட்டால் லிங்கா தோல்வியடைந்தது - கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்



     




    View this post on Instagram





     

    A post shared by Viral Bhayani (@viralbhayani)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னணி மலையாள நடிகரை கரம் பிடிக்கும் நித்யா மேனன்?

    திரை வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள இந்த பீரியட் ஆக்ஷன் படம், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனின் தழுவலாகும். இதில் ஐஸ்வர்யா, பழுவூர் இளவரசி, பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியாக நடித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Aishwarya Rai

    அடுத்த செய்தி