Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் - வெளியானது போஸ்டர்

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் - வெளியானது போஸ்டர்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இதைத் தொடர்ந்து குந்தவையாக நடித்துள்ள திரிஷா மற்றும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி ஆகியோரின் போஸ்டர்களையும் வெளியிட உள்ளனர்.

  • News18
  • Last Updated :
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெறும் ஐஸ்வர்யா ராயின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது. அதில் முதல் கட்டமாக படத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்களின் தோற்றங்களை ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஆதித்ய கரிகால சோழனாக நடித்திருக்கும் விக்ரமின் தோற்றத்தை வெளியிட்டனர். அதையடுத்து நேற்று வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தியின் கதாபாத்திரத்தை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான நந்தினி கதாபாத்திரத்தின் தோற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



Also read... வெள்ளிக்கிழமை வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட டீசர்!

இதைத் தொடர்ந்து குந்தவையாக நடித்துள்ள திரிஷா மற்றும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி ஆகியோரின் போஸ்டர்களையும் வெளியிட உள்ளனர்.

மேலும் வெள்ளிக்கிழமை மாலை பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடுகின்றனர். இந்த திரைப்படத்தை மிகப் பிரமாண்ட பொருட்ச்செலவில் அளவில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Aishwarya Rai, Ponniyin selvan

அடுத்த செய்தி