ஐஷ்வர்யா ராய் பச்சன், மகள் ஆராத்யா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

பிரபல பாலிவுட் நடிகையும், உலக அழகிப்பட்டம் பெற்றவருமான ஐஷ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகள் ஆராத்யா பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐஷ்வர்யா ராய் பச்சன், மகள் ஆராத்யா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..
ஐஷ்வர்யா ராய், ஆராத்யா பச்சன்
  • Share this:
பிரபல பாலிவுட் நடிகையும், உலக அழகிப்பட்டம் பெற்றவருமான ஐஷ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகள் ஆராத்யா பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐஷ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகள் ஆராத்யா பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என மஹாராஷ்ட்ர பொது சுகாதார அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர்களுமான, ஐஷ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சனுக்கும், குடும்ப உறுப்பினரும், பாலிவுட்டில் கொண்டாடப்படும் நடிகருமான அமிதாப் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதுடன், “எனது குடும்பத்தார் மற்றும் எனது பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.  கடந்த 10 நாட்களுக்குள் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய மகனும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading