Home /News /entertainment /

Aishwarya Rai: பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தவறாகக் கேள்வி கேட்ட செய்தியாளர்... ஐஸ்வர்யா ராய் கொடுத்த கூல் பதில்!

Aishwarya Rai: பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தவறாகக் கேள்வி கேட்ட செய்தியாளர்... ஐஸ்வர்யா ராய் கொடுத்த கூல் பதில்!

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்தப் படத்தில் நடித்தது பெருமையாக இருப்பதாகவும், மணி சாருடன் மீண்டும் இணைந்து வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார் ஐஸ்வர்யா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இது மணிரத்னத்துடன் உங்கள் இரண்டாவது படம் எனக் கூறிய செய்தியாளரிடம், நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன் என்று கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராய். 

    பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

    குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    கடவுள் எனக்காக டன்சோவில் அனுப்பிய பரிசு நீ... மனைவி மகாலட்சுமியை புகழ்ந்த ரவீந்தர்!

    இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இருவரும் கலந்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையே விழாவில் கலந்துக் கொள்ள வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தப் படத்தில் நடித்தது பெருமையாக இருப்பதாகவும், மணி சாருடன் மீண்டும் இணைந்து வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்!

    அப்போது செய்தியாளர் பக்கமிருந்து, மணிரத்னத்துடன் இது உங்களுடைய இரண்டாவது படம், இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற குரல் கேட்டது. அதற்கு, “இரண்டாவது படமா? நான் அவருடன் நிறைய படங்களில் பணிபுரிந்து விட்டேன். நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன், போய் செக் செய்து பாருங்கள். மணி சாரின் இருவர் படத்தின் மூலம் தான் எனது கரியர் ஆரம்பமானது. பின்னர் குரு, அதற்கடுத்து ராவணன், இப்போது பொன்னியின் செல்வன்” என இயக்குநர் மணிரத்னத்துடன் தான் இணைந்து பணிபுரிந்த படங்களை பட்டியலிட்டார் ஐஸ்வர்யா ராய்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Aishwarya Rai, Mani ratnam, Ponniyin selvan

    அடுத்த செய்தி