நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது தான் ஆடிய நடன வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சின்னத்திரை பிரபலம் ஐஸ்வர்யா பிரபாகர்.
சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமாகி பின்னர் சன் டிவியின் சன் குடும்ப விருது விழா நிகழ்ச்சி மூலம் ஆங்கரானவர் ஐஸ்வர்யா. ஆங்கரில் ஒரு கலக்கு கலக்கிய ஐஸ்வர்யா பிரபாகர் நன்கு நடனம் ஆட தெரிந்தவர். பின்பு விஜய் டிவியின் நம்பர் ஓன் டான்ஸ் ஷோவான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.
முதலில் ஐஸ்வர்யா, விஜய் டிவி லொள்ளு சபா புகழ் ஜீவா உடன் தான் நடன நிகழ்ச்சிக்கு வந்தார். அதன் பின்பு, திடீரென்று ஜீவா நிகழ்ச்சியில் இருந்து விலக, ஐஸ்வர்யா தனக்கு நடன ஜோடியாக சிவகார்த்திகேயனை அழைத்து வந்து மேடை ஏறினார். அப்போது தான் சிவகார்த்திகேயன் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பீக்கில் இருந்த நேரம்.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஆர்யன் உணர்ச்சிப்பதிவு!
இருவரும் நடனத்தில் கலக்கினர். நிகழ்ச்சிக்கு வந்த
சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி போட்டியாளர்கள் அனைவரும் இவர்களை மனதார பாராட்டினர். அதனைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா, ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
குக் வித் கோமாளி புகழை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த பிரபல கிரிக்கெட் வீரர்!
பின்னர் கடந்த 2015-ஆம் ஆண்டு
திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா பிரபாகர், வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் போது நடனம் ஆடிய வீடியோவை, ”நான் நடனக் கலைஞராக இருப்பதால், கர்ப்பமாக இருந்தபோது மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தேன்” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்க
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.