கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் படத்தில் இணையும் மலையாள ஹீரோயின்!

news18
Updated: July 18, 2019, 3:23 PM IST
கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் படத்தில் இணையும் மலையாள ஹீரோயின்!
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
news18
Updated: July 18, 2019, 3:23 PM IST
தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்திலும், துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர மாரி செல்வராஜின் இயக்கத்திலும், ராம்குமார் இயக்க இருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம் வெளிநாடுகளை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா விஜயலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். மலையாள படங்களில் நடித்து வரும் இவர், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார்.

விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

வீடியோ பார்க்க: ஜனங்களின் நாயகன் விவேக்!

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...