ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..! அர்ஜுன் தாஸுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலிக்கு காதலா? வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..! அர்ஜுன் தாஸுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலிக்கு காதலா? வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

அர்ஜுன் தாஸுடன் ஐஸ்வர்யா லெக்ஷ்மி

அர்ஜுன் தாஸுடன் ஐஸ்வர்யா லெக்ஷ்மி

நடிகர் அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ஹார்ட் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றார் மலையாள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி. நிறைய பிரபலங்கள் பூங்குழலி போன்ற தோற்றத்திலிருக்கும் படங்களை சமூக வலைதளங்களல் பதிவேற்றினர். இது அவரது கதாப்பாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உதாரணம். மேலும் கடந்த வருட இறுதியில் வெளியான கட்டா குஸ்தி படமும் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. தமிழில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா இருக்கிறார் .

கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி நேர்மறை விமர்சனங்களை அள்ளிய கார்கி படத்தின் தயாரிப்பாளர்களில் ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் ஒருவர். புத்தம் புது காலை விடியாதா, கேப்டன் போன்ற படங்களும் தமிழில் இவர் நடிப்பில் வெளியாகின. இந்த ஆண்டு இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றன.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ஹார்ட் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் காதலிப்பதை மறைமுகமாக அறிவித்துள்ளாரா அல்லது இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.




 




View this post on Instagram





 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)



அர்ஜுன் தாஸும் கைதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வசந்த பாலன் இயக்கத்தில் அநீதி, அங்கமாலி டைரீஸ் ஹிந்தி ரீமேக், தெலுங்கில் புட்டபொம்மா போன்ற படங்களில் நடித்துவருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் அர்ஜுன் தாஸ் நடித்துவருகிறார்.

First published:

Tags: Aishwarya, Arjun Doss, Love, Ponniyin selvan, Tamil News