ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி?

பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி?

ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி

ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பூங்குழலி’ என்கிற ‘சமுத்திரகுமாரி’ வேடத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு தான் சம்பளத்தை உயர்த்தியதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி தெரிவித்துள்ளார். 

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மணிரத்னத்தின் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பூங்குழலி’ வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். அவர் இப்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னையில் நடந்த ‘கட்டா குஸ்தி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு தனது சம்பளம் உயர்த்தப்பட்டதாக எழுந்த வதந்திகளுக்கு பதிலளித்தார். மீடியாக்களிடம் பேசிய அவர், தனது சம்பள பேக்கேஜை அதிகரித்ததாக வந்த வதந்திகளை மறுத்துள்ளார். ஒரு படம் முழுக்க முழுக்க இயக்குனரின் கை வேலை என்றும், அதில் தேவைக்கேற்ப தனது பங்களிப்பை கொடுத்ததாகவும் கூறினார்.

திவ்யா ஸ்ரீதருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்திய செவ்வந்தி சீரியல் டீம்!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பூங்குழலி’ என்கிற ‘சமுத்திரகுமாரி’ வேடத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருந்தார். அவர் படத்தின் பிற்பாதியில் மட்டுமே தோன்றினாலும், அவரது பாத்திரம் மிகவும் வலுவாக இருந்தது. ஏப்ரல் 2023-ல் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில், மீண்டும் அவரது கதாபாத்திரத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema