முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஃப்ரெண்டா..? ஐஸ்வர்யா தனுஷ்ன்னு தான் இன்னும் வச்சிருக்காங்க - தனுஷை சாடும் நெட்டிசன்கள்

ஃப்ரெண்டா..? ஐஸ்வர்யா தனுஷ்ன்னு தான் இன்னும் வச்சிருக்காங்க - தனுஷை சாடும் நெட்டிசன்கள்

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா இன்னும் தனது சமூக வலைதள பக்கங்களை ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரிலேயே வைத்திருக்கிறார், ஆனால் நீங்களோ அவரை ஃப்ரெண்ட் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

ஐஸ்வர்யாவை ப்ரெண்ட் எனக் குறிப்பிட்ட தனுஷை, அவர் இன்னும் ஐஸ்வர்யா தனுஷ் என்றே தனது சமூக வலைதள பக்கங்களை வைத்திருப்பதாகக் கூறி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து மீண்டும் இயக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

என் தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்துகள் - ட்விட்டரில் ஆச்சர்யப்படுத்திய தனுஷ்!

இந்நிலையில் இன்று பயணி மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டது. தமிழில் நடிகரும், ஐஸ்வர்யாவின் அப்பாவுமான ரஜினிகாந்த் அதனை வெளியிட்டார். தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் இப்பாடலை வெளியிட்டனர்.

இந்நிலையில் பயணி மியூசிக் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த தனுஷ், “பயணி மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இது ஒருபக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் மறுபுறம் நெட்டிசன்களிடம் எரிச்சலையும் கிளப்பியுள்ளது.

காத்திருப்பு முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா இன்னும் தனது சமூக வலைதள பக்கங்களை ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரிலேயே வைத்திருக்கிறார், ஆனால் நீங்களோ அவரை ஃப்ரெண்ட் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எதுவாக இருந்தாலும் மனசு விட்டு பேசுங்கள், எல்லாம் சரியாகிடும். இல்லையெனில் பின்னால் வறுத்தப்படுவீர்கள் என தனுஷை சாடிய வண்ணம் இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush