Home /News /entertainment /

ட்விட்டரில் தனுஷ் பெயர் நீக்கம்... அப்பா பெயரை இணைத்துக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ட்விட்டரில் தனுஷ் பெயர் நீக்கம்... அப்பா பெயரை இணைத்துக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ரஜினி - ஐஸ்வர்யா - தனுஷ்

ரஜினி - ஐஸ்வர்யா - தனுஷ்

சமீபத்தில் நடந்த இளையராஜாவின் இசைக்கச்சேரிக்கு தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்துக் கொண்ட தனுஷ், மேடையில் தாலாட்டு பாடல் ஒன்றையும் பாடினார்.

    கணவர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா, தற்போது ட்விட்டரில் தனது பெயரை ஐஸ்வர்யா தனுஷ் என்பதிலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தாக மாற்றியுள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.

    ஆனால் இது கணவன் - மனைவிக்குள் ஏற்பட்டுள்ள சாதாரண கருத்து வேறுபாடு தான் எனவும், ஆகையால் அவர்கள் தற்காலிகமாக பிரிந்திருப்பதாகவும் விரைவில் இணைவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து முன்னணி ஊடகத்திற்கு பேட்டியும் அளித்திருந்தார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா.

    இதையடுத்து மீண்டும் இயக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கினார். இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    மேலும் படிக்க - ஹீரோவான குக் வித் கோமாளி புகழ்... வாழ்த்துகளை குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக்!

    நடிகர் தனுஷ் தான் ஒப்பந்தமாகியுள்ள படங்களின் படப்பிடிப்புகளில் பிஸியானார். அவரது நடிப்பில் மாறன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதோடு சமீபத்தில் நடந்த இளையராஜாவின் இசைக்கச்சேரிக்கு தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்துக் கொண்ட தனுஷ், மேடையில் தாலாட்டு பாடல் ஒன்றையும் பாடினார்.



    இதையும் படிங்க - சாபம் விட்ட எல்லாருக்கும் நன்றி... விஜய் டிவி பாவம் கணேசன் நவீன் மனைவி கண்ணீர்

    இது ஒருபுறமிருக்க, கணவரை பிரிந்த ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ஐஸ்வர்யா தனுஷ் என்றே தனது பெயரை வைத்திருந்தார். சமீபத்தில் ட்விட்டரில் வெரிஃபைடு டிக்கையும் வாங்கினார். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா தனுஷ் என்றே இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush

    அடுத்த செய்தி