சார்பட்டா பரம்பரை பட விவகாரம் - இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ்

பா.ரஞ்சித்

சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

  • Share this:
    ’சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் தொடர்பாக படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ’காலா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியப் படம் ‘சார்பட்டா பரம்பரை’. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1970-களில் பிற்பகுதியில் நடக்கும் கதையான சார்பட்டா படம், குத்துச் சண்டையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் சார்பட்டா பரம்பரை திரையில் காண்பித்திருந்தது. இந்த காட்சிகளை திமுக தொண்டர்கள் ஒருபுறம் கொண்டாட, மறுபுறம் அதிமுக தொண்டர்கள் இந்தக் காட்சிகளால் அதிருப்தியடைந்தனர்.

    இந்நிலையில், சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டிஸில் ’வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச் செய்தியை பா.ரஞ்சித் பரப்பியதாகவும், அந்தக் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையை ஒப்புக் கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: