ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரைட்டர் படத்தை வாங்கி கணக்கை தொடங்கிய ஆகா தமிழ்...!

ரைட்டர் படத்தை வாங்கி கணக்கை தொடங்கிய ஆகா தமிழ்...!

மே தினத்தையொட்டி பல்வேறு சுவாரசிய நிகழ்ச்சிகள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது.

மே தினத்தையொட்டி பல்வேறு சுவாரசிய நிகழ்ச்சிகள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது.

இந்த வருடம் தமிழில் வெளியான பெருமைக்குரிய திரைப்படங்களுள் ஒன்று ரைட்டர். காவல்துறை என்ற அதிகார அமைப்பு பொதுமக்களிடம் வெளிப்படுத்தும் வன்முறைகளை பார்த்து வந்தவர்களுக்கு, அத்துறையிலேயே அடிமட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை ரைட்டர் திரைப்படம் காட்சிப்படுத்தியது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

இரஞ்சித் தயாரிப்பில் உருவான ரைட்டர் படத்தின் ஓடிடி உரிமையை ஆகா தமிழ் வாங்கியுள்ளது.

இந்த வருடம் தமிழில் வெளியான பெருமைக்குரிய திரைப்படங்களுள் ஒன்று ரைட்டர். காவல்துறை என்ற அதிகார அமைப்பு பொதுமக்களிடம் வெளிப்படுத்தும் வன்முறைகளை பார்த்து வந்தவர்களுக்கு, அத்துறையிலேயே அடிமட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை ரைட்டர் திரைப்படம் காட்சிப்படுத்தியது. அறிமுக இயக்குனர் ஜேக்கப் பிராங்ளின் நுட்பமாக இதனை பதிவு செய்து, ரைட்டரை பெருமைமிகு படமாக மாற்றியிருந்தார்.

விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட ரைட்டர் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆகா தமிழ் ஓடிடி வாங்கியுள்ளது. தெலுங்கில் இயங்கி வந்த ஆகா ஓடிடி சமீபத்தில்தான் தங்களின் தமிழக பிரிவை தொடங்கியது. ஆரம்பத்திலேயே ரைட்டர் போன்ற சிறந்த படத்தை வாங்கி நம்பிக்கை அளித்துள்ளது. ரைட்டர் எப்போது ஆகா தமிழில் வெளியிடப்படும் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

ஆகா ஓடிடி தளம் தெலுங்கைப் போலவே தமிழிலும் வெப் தொடர்கள் தயாரிக்க உள்ளது. அதேபோல் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டமும் அவர்களிடம் உள்ளது. மலையாளத்தில் வெளியான படங்களை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து தங்களின் தளத்தில் வெளியிடுவது போல பிறமொழியில் வெளியான சிறந்தப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஆகா தமிழ் திட்டமிட்டுள்ளது.

Also read...  தமிழில் வெளியாகும் தி பேட்மேன் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சின்ன பட்ஜெட்டில் தயாரான படங்களை பெரிய சர்வதேச ஓடிடி நிறுவனங்கள் புறக்கணிக்கிற நேரத்தில் ஆகா தமிழ் போன்ற ஓடிடிகள் அவற்றை வாங்க முன்வருவது ஆரோக்கியமான வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

First published:

Tags: Director samuthrakani, Pa. ranjith