Aha OTT: சிறு பட தயாரிப்பாளர்களுக்கு நற்செய்தி - தமிழுக்கு வரும் ஆஹா ஓடிடி!

ஆஹா ஓடிடி

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸும், மை ஹோம் குரூப்பும் இணைந்து ஆஹா ஓடிடி தளத்தை நடத்துகின்றன.

  • Share this:
    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள் இன்னும் திறக்கவில்லை. தமிழில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இவைகளின் ஒரே தேர்வு ஓடிடி தளங்கள்.

    தமிழ் திரைப்படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்குவதற்கு இருப்பதைப் போன்று, ஓடிடி-யில் படத்தை வாங்குவதற்கும் மிகப்பெரிய லாபி உள்ளது. குறிப்பிட்ட பத்து நபர்களைத் தாண்டியே நீங்கள் எந்த ஓடிடி தளத்தையும் அணுக முடியும். இவர்களுக்கு கமிஷன் கொடுத்தது போக, தயாரிப்பாளர்கள் கையில் எஞ்சுவது சொற்ப தொகையே.

    இந்த கமிஷன் அனைத்து மொழிகளில் இருந்தாலும் தமிழகத்தில் மிக மோசமாக உள்ளது. இதனை இப்போதைக்கு யாராலும் சரி செய்ய இயலாது. அதிகபடியான ஓடிடி தளங்கள் வருவது ஒன்றே இந்த கமிஷன் சிண்டிகேட்டை உடைப்பதற்கான ஒரே வழியாகும். அந்தவகையில் சின்னப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு நற்செய்தி, தெலுங்கு சினிமா, வெப் தொடர்களை வெளியிட்டு வந்த ஆஹா ஓடிடி தளம் தமிழுக்கும் வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸும், மை ஹோம் குரூப்பும் இணைந்து ஆஹா ஓடிடி தளத்தை நடத்துகின்றன. தெலுங்கு சினிமாக்கள், வெப் தொடர்களை மட்டும் இதுவரை இவர்கள் ஒளிபரப்பி வந்தனர்.

    தமன்னாவின் லெவன்ந்த் ஹவர், அமலா பாலின் குடி எடமைதே வெப் தொடர்கள் இவர்களின் தயாரிப்பே. தற்போது இவர்கள் தமிழிலும் ஆஹாவின் ஒளிபரப்பை தொடர தீர்மானித்துள்ளனர். முதல்கட்டமாக சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்த படங்களை வாங்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தொடர்ச்சியாக தமிழ் படங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    ஓடிடி வெளியீட்டுக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஆஹாவின் வரவு நலம்பயக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: