அஜித்தை வாழ்த்திய ‘விஜய் 63’ படக்குழு - ரசிகர்கள் மகிழ்ச்சி!

அஜித்தை வாழ்த்திய ‘விஜய் 63’ படக்குழு - ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடிகர் அஜித்
  • News18
  • Last Updated: May 1, 2019, 12:47 PM IST
  • Share this:
நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது ‘விஜய் 63’ தயாரிப்பு நிறுவனம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள், 58 படங்கள் என தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார் அஜித்.

நடிகர் அஜித்துக்கு இன்று 49-வது பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவருடைய ரசிகர்கள் #HappyBirthdayThala என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


உழைப்பாளர் தினமும் அஜித்தின் பிறந்தநாளும் ஒரேநாளில் கொண்டாடப்படுவதால் இரண்டையும் ஒன்றாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் அஜித்தை அரசியலுக்கு அழைத்த இயக்குநர் சுசீந்திரன். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்க என் வேண்டுதல்கள்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்நிலையில் திரைத்துறை பிரபலங்கள் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களும் அஜித்தை வாழ்த்தியுள்ளது. அந்த வகையில் ‘விஜய் 63’படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.வீடியோ பார்க்க: அஜித்... தவிர்க்கவே முடியாத தனி சக்தி...!
First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்