ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வடிவேலு நடிக்கவுள்ள ’நாய் சேகர்’ பட டைட்டிலில் ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட்லுக்!

வடிவேலு நடிக்கவுள்ள ’நாய் சேகர்’ பட டைட்டிலில் ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட்லுக்!

நாய் சேகர்

நாய் சேகர்

Lyca vs AGS | Naai Sekar | கல்பாத்தி எஸ்.அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சதீஷை வைத்து தாங்கள் தயாரிக்கும் படத்துக்கு நாய் சேகர் என பெயர் வைத்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

லைகா தயாரிப்பில் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க இருக்கும் நிலையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தாங்கள் தயாரிக்கும் படத்துக்கு நாய் சேகர் என பெயர் வைத்துள்ளது. 

சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் வடிவேலின் கதாபாத்திரப் பெயர் நாய் சேகர். கைப்புள்ள போன்று நாய் சேகர் கதாபாத்திரமும் வடிவேலின் நகைச்சுவை வரலாற்றில் ஓர் மைல்கல். "... இதுதான் அழகுல மயங்குறதா?", "என்னை வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலையே.." போன்ற பல வடிவேலின் 'பன்ச்' டலாக்குகள் இடம்பெற்ற படம். அந்தவகையில் நாய் சேகர் கதாபாத்திரம் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வடிவேலு நடிப்பதற்கு போடப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. படத்தை லைகா தயாரிப்பதாகவும் முடிவானது.

இந்நிலையில், அவர்களை முந்திக் கொண்டு கல்பாத்தி எஸ்.அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சதீஷை வைத்து தாங்கள் தயாரிக்கும் படத்துக்கு நாய் சேகர் என பெயர் வைத்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது. வடிவேலு ரசிகர்களுக்கு இது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது

Also read... பா.இரஞ்சித்தின் புதிய படம் - சூப்பர் அப்டேட்...!

சுராஜ் மற்றும் லைகா தரப்பிலிருந்து ஏஜிஎஸ்ஸின் இந்த செயலுக்கு இதுவரை எந்த விமர்சனமும்; வரவில்லை.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vadivelu, Entertainment