அன்னையர் தினத்தையொட்டி கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து அகிலம் நீ வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 14-ம்தேதி வெளியான கே.ஜி.எஃப்.2 திரைப்படம் 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ. 1,100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
குறிப்பாக இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக கலெக்சன் செய்துள்ளது. கே.ஜி.எஃப். 3 படமும் அடுத்து வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க - கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்... ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்
அம்மா சாந்திக்கு மகன் ராக்கி கொடுத்த வாக்குறுதிதான் கே.ஜி.எஃப். படத்தின் மையக் கருவாக அமைந்திருக்கும். அந்த வகையில் அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்திருந்தன.
இதையும் படிங்க - நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயன்தாரா படம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
இந்நிலையில் அன்னையர் தினத்தையொட்டி ‘அகிலம் நீ’ அம்மா பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் வெளியான கருவினில் எனை சுமந்து பாடல், அம்மாவை வாழ்த்தி பாராட்டி, மகன் பாடுவதைப் போன்று அமைந்திருக்கும். அகிலம் நீ பாடல், மகனுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் அம்மா பாடுவதைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
யூடியூபில் வெளியான இந்த பாடல் ரசிகர்களின விருப்பத்தை பெற்று வருகிறது. கே.ஜி.எஃப். 2 திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெற்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.