‘சிங்கப் பெண்ணே’ பாடலை அடிச்சுத் தூக்கிய ‘அகலாதே’!

யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: July 27, 2019, 11:57 AM IST
‘சிங்கப் பெண்ணே’ பாடலை அடிச்சுத் தூக்கிய ‘அகலாதே’!
அகலாதே | சிங்கப்பெண்ணே
news18
Updated: July 27, 2019, 11:57 AM IST
நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ‘அகலாதே’ பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி கடந்த 25-ம் தேதி அகலாதே பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே 50  லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

முன்னதாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் சிங்கப் பெண்ணெ பாடல் கடந்த 23-ம் தேதி வெளியானது. இந்தப் பாடல் வெளியாகி 40 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வைகளைப் பெற்றது. இந்த சாதனையை 24 மணி நேரத்தில் முறியடித்துள்ளது அஜித்தின்  ‘அகலாதே’ பாடல்.Loading...

சிங்கப்பெண்ணே பாடல்:

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...