முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'சமூக பொறுப்பு.. மோகன்ஜிதான் உண்மையான கலைஞன்' - பகாசூரன் படத்தை புகழ்ந்து தள்ளிய பேரரசு!

'சமூக பொறுப்பு.. மோகன்ஜிதான் உண்மையான கலைஞன்' - பகாசூரன் படத்தை புகழ்ந்து தள்ளிய பேரரசு!

பேரரசு

பேரரசு

சமூக பொறுப்போட படம் எடுத்த இயக்குநர் மோகன் ஜி தான் உண்மையான கலைஞன் என்று ’பகாசூரன்’ படத்தை பார்த்த பேரரசு தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

‘பழைய வண்ணாரப்பேட்டை’, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி, தாரக்ஸி, கே.ராஜன், கூல் சுரேஷ், சசிலயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.

'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. செல்ஃபோனும், அதில் உள்ள டேட்டிங் செயலிகளும் இளம் தலைமுறையினரை, குறிப்பாக பெண்களை எப்படியெல்லாம் சீரழிக்கின்றன என்பது தான் பகாசூரன் கதையாகும்.

மோகன் இயக்கிய முந்தைய திரைப்படங்கள் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகவும் அந்த சமூகத்தின் இளைஞர்களை தவறானவர்களாக சித்தரிப்பதாகவும் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் இந்த திரைப்படத்தில் தன்னுடைய கதைகளத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இருந்தபோதிலும் பெண்களின் சில முடிவுகள் அவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்று விடுகின்றன. பெண்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்நிலையில் நேற்று பகாசூரன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்காக திரையிடப்பட்டது. அதில் இயக்குனர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி மற்றும் நிர்வாகிகள் பேரரசு மற்றும் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தை பார்த்தனர்.

படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பேரரசு பேசுகையில், மோகன் ஜியோட இதுக்கு முந்தைய படங்கள் ஒரு சார்பா இருக்குன்னு விமர்சனம் வந்துச்சு. ஆனா இந்த படம், மக்களையும், பெற்றோர்களையும் சார்ந்த படம். முக்கியமா பெண் குழந்தைகளை சார்ந்த படம். மொத்தத்துல இது சமூகத்தை சார்ந்த படம். யாரு சமூக பொறுப்போடு படம் எடுக்குறாங்களோ அவங்க தான் உண்மையான கலைஞன். அப்படி உண்மையான கலைஞன் தான் மோகன் ஜி என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment