Home /News /entertainment /

கமலின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?

கமலின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

Kamal Next Movie : கமல் படத்தின் ஷூட்டிங் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தின் மெகா ஹிட்டைத் தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபடம் 2 படத்திற்கு பின்னர் 4 ஆண்டுகள் கழித்து கமலின் விக்ரம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஹாட்ரிக் ஹிட் அடித்த இயக்குனர், உலக நாயகன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா, அனிருத் என கோலிவுட் நட்சத்திரங்கள் விக்ரம் படத்தை இணைந்ததால், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இதனை தக்க வைக்கும் வகையில் கடந்த ஒரு மாதமாக விக்ரம் படக்குழுவினர் குறிப்பாக கமல் அதிரடி புரொமோஷனில் இறங்கினார். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு சென்ற அவர், விக்ரம் படத்தை நன்றாக ரீச் செய்தார்.

இதையும் படிங்க - ‘கனவு நிஜமானது...’ கமலுடன் நடித்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சி!!

நேற்று வெளியான விக்ரம் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் அமைந்ததால், படக்குழுவினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். இன்னும் சில வாரங்களுக்கு விக்ரம் படம்தான் திரையரங்குகளில் ஓடக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் கமலின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. மலையாளத்தில் சமீபத்தில் ஹிட்டடித்த மாலிக், நயட்டு, சி யூ சூன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் தான் கமலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க - விக்ரம் படம் வெளியான முதல் நாளே வசூல் குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

இவர் கமல் நடித்திருந்த விஸ்வரூபடம் படத்தின் 2 பாகங்களுக்கும் எடிட்டராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது.



முன்னதாக தேவர் மகன் படத்தின் அடுத்த பாகத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும், இதுதொடர்பான கதையை மகேஷ் நாராயணன் வடிவமைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

மகேஷ் இயக்கவுள்ள கமல் படத்தின் ஷூட்டிங் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Vikram

அடுத்த செய்தி