விஜய்க்கு பின் சிவகார்த்திகேயன் தான் - மேடையில் புகழ்ந்து பேசிய பிரபல இயக்குநர்!

விஜய்க்கு பின் சிவகார்த்திகேயன் தான் - மேடையில் புகழ்ந்து பேசிய பிரபல இயக்குநர்!
  • Share this:
விஜய்க்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட, குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக சிவகார்த்திகேயன் இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இணையதள ஊடகத்தின் விருது விழாவில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் அவர் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அப்போது மேடையில் இருந்த சிவகார்த்திகேயனை வைத்துக் கொண்டு பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், “எம்.ஜி.ஆர் முதல் பாலச்சந்தர் வரை பலரும் தயாரிப்பாளராகி இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களின் கனவை நனவாக்குவதற்காகத் தான். ஆனால் தன் நண்பனின் கனவை நனவாக்க தயாரிப்பாளரான சிவகார்த்திகேயனை பாராட்டுகிறேன். இளையதளபதி விஜய்க்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக நீங்கள் இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.” என்றார்.


இதையடுத்து திரைத்துறையின் வெற்றி குறித்த கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “என்னவென்றே தெரியாத துறைதான் எனக்கு சினிமாத் துறை. வெற்றி என்பது நம்முடையது மட்டுமல்ல. நிறைய பேர் சேர்ந்து பார்வையாளர்களை திருப்திப்படுத்துவதன் மூலம் கிடைப்பது. சவாலான விசயம். ஒரு பயம் இருக்கும். வெற்றி பெற்றுவிட்டால் அதிக மகிழ்ச்சியும், தோல்வியடைந்தால் தோல்வியும் நிரந்தரம் அல்ல. அடுத்து என்ன என்ற கேள்வி தான் இருக்கும். நான் அதிகம் மகிழ்ச்சியாக இருந்தது கனா திரைப்படம் வெற்றியடைந்த போதுதான்” என்றார்.

மேலும் பேசிய சிவகார்த்திகேயன், “நான் மிகப்பெரிய நன்றி சொல்ல வேண்டும் அது செல்வராகவனுக்குத் தான். எதிர்நீச்சல் படத்தைப் பார்த்த செல்வராகவன், இவன் நல்ல டேலண்ட் என்று சொன்னார். அதை தனுஷ் என்னிடம் கூறினார். அப்போதே எனக்கு பெரிய விருதுகளைப் பெற்ற மகிழ்ச்சி இருந்தது.

கனா படத்தைத் தயாரித்தது நான் அருண்ராஜா மேல் வைத்த நம்பிக்கை என்று சொன்னார்கள். ஆனால் அது தனுஷ் என்மீது எதிர்நீச்சல் படத்தில் வைத்த நம்பிக்கைதான். நம்ம வீட்டுப் பிள்ளை கிளைமாக்ஸ் காட்சியில் என்னுடைய நடிப்பை பார்த்து கண் கலங்கியதாக பலரும் கூறினர். என்னை அப்படி ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த 8 வருட சினிமா பயணம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.கனா படத்துக்கு கிடைத்த விருது எனக்கானது அல்ல. என் நண்பன் அருண்ராஜா காமராஜாவுக்கானது. அடுத்த படம் மிகப்பெரிய நடிகரை வைத்து இயக்குகிறார். இந்த மேடையில் அதை அறிவிக்க முடியாது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading