விஜயை அரசியலுக்கு அழைக்கும் பிரசாந்த் கிஷோர் - ஜெகன் மோகன் ரெட்டி! - மதுரையில் போஸ்டர் பரபரப்பு!

விஜயை அரசியலுக்கு அழைக்கும் பிரசாந்த் கிஷோர் - ஜெகன் மோகன் ரெட்டி! - மதுரையில் போஸ்டர் பரபரப்பு!
விஜய்
  • Share this:
ஆந்திர முதல்வர் மற்றும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் விஜயை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

சமீபத்தில் பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.அகோரம், பைனான்சியர் அன்புச் செழியன் நடிகர் விஜய் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையின் முடிவில், அன்புசெழியனுக்கு தொடர்புள்ள இடங்களிலிருந்து ரூ.77 கோடி ரொக்கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

மேலும் இச்சோதனையின் போது மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய்யை அவரது வீட்டுக்கு அதிகாரிகள் அழைத்து வந்து சோதனை நடத்தியது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தவே இச்சோதனை நடத்தப்பட்டதாகவும் , இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் பலரும் கருதினர்.


இந்நிலையில் நடிகர் விஜயை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விஜய்யிடம் கூறுவது போல் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர்கள் மதுரை மத்திய தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: உபெனா: விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக் ரிலீஸ்!
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்