ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வேதாளம் ரீமேக் மட்டுமல்ல... அஜித்தின் மற்றொரு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கையிலெடுத்த சிரஞ்சீவி

வேதாளம் ரீமேக் மட்டுமல்ல... அஜித்தின் மற்றொரு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கையிலெடுத்த சிரஞ்சீவி

சிரஞ்சீவி - அஜித்குமார்

சிரஞ்சீவி - அஜித்குமார்

இந்தப் படத்துக்காக மொட்டை அடித்த சிரஞ்சீவியின் கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Hyderabad, India

நடிகர் அஜித் குமாரின் வேதாளம் கடந்த 2015-ல் வெளியாகி அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. வீரம் வெற்றிக்கு பிறகு அஜித் - இயக்குநர் சிவா கூட்டணி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது.

தற்போது வேதாளம் திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்ததுபோல், இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் ஹீரோயின் வேடத்தில் தமன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுவருகிறது. இந்தப் படத்துக்காக மொட்டை அடித்த சிரஞ்சீவியின் கெட்டப் சமூக வலளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் - சிவா கூட்டணியின் மற்றொரு வெற்றிப்படமான விஸ்வாசம் பட தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஸ்வாசம் படம் நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Ajith, Remake movies, Viswasam