ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாத்தியை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் இணைந்த தனுஷ்…

வாத்தியை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் இணைந்த தனுஷ்…

தனுஷ் - சேகர் கம்முலா

தனுஷ் - சேகர் கம்முலா

மூன்று மொழியில் உருவாகும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாத்தி படத்தை தொடர்ந்து, மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் தனுஷ் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு,  இந்தி ஆகிய மொழிகளில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

தமிழ் நடிகரான தனுஷ், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

பாபா படத்திற்கு புதிய இசையை சேர்க்க ஏ.ஆர். ரகுமான் ஆர்வம்… ரஜினி பிறந்த நாளையொட்டி படம் வெளியாகிறது…

இந்த நிலையில்  மீண்டும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா கூட்டணி அமைத்திருக்கிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அந்த திரைப்படம் உருவாகிறது.

இதற்கான செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகின. இந்த நிலையில் தனுஷ் - சேகர் கம்முலா திரைப்படத்திற்கான பட பூஜை ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது.  அந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷ் ஏற்கனவே வாத்தி திரைப்படத்தில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கூட்டணி அமைத்தார்.  இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் அவர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்னைகளை சரிசெய்து மீண்டும் மனைவியுடன் இணைந்த நடிகர்... ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

மூன்று மொழியில் உருவாகும் அந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

அரசியல் த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் இடம்பெறும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர்.

First published:

Tags: Actor dhanush