ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவுக்கு பின்னர் மீண்டும் சூப்பர் பைக்கை ஸ்டார்ட் செய்த அஜித்… வைரல் போட்டோ!

துணிவுக்கு பின்னர் மீண்டும் சூப்பர் பைக்கை ஸ்டார்ட் செய்த அஜித்… வைரல் போட்டோ!

அஜித ரீசன்ட் க்ளிக்.

அஜித ரீசன்ட் க்ளிக்.

லடாக்கிற்கு சென்ற அஜித்துடன் துணிவு படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியரும் உடன் சென்றிருந்தார். இந்த ஃபோட்டோக்கள் வைரலாகின.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    துணிவு படப்பிடிப்புக்கு பின்னர் அஜித் மீண்டும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு உலகைச் சுற்ற கிளம்பி விட்டார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

    வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார். இதுவரையில்லாத தோற்றத்தில் அஜித் இடம்பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    நெகடிவ் கேரக்டரில் அஜித் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையிலேயே நடந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு துணிவு படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    டிசம்பரில் திருமணம்.. பிஸ்னஸ் பார்ட்னரை கரம் பிடிக்கும் ஹன்சிகா.!

    எச்.வினோத்தின் ஒவ்வொரு படத்திலும், உண்மையிலேயே நடந்த சம்பவங்களின் டச் இருக்கும். அந்த வகையில் அவரது முந்தைய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை படங்கள் வரவேற்பை பெற்றன. தற்போது துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில், படம் நன்றாக வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து அஜித் மீண்டும் தனது சூப்பர் பைக்கை எடுத்துக் கொண்டு உலகம் சுற்ற கிளம்பி விட்டார். துணிவு படப்பிடிப்பின்போதே சொந்த விஷயங்கள் காரணமாக ஐரோப்பா சென்ற அஜித், அங்கும் சில நாடுகளில் பைக்கில் பயணம் மேற்கொண்டார்.

    சினிமாவுக்காக பெயரை மாற்ற முடியாது.. டோலிவுட் அனுபவம் குறித்து பேசிய அஞ்சலி நாயர்

    இந்தியாவில் லடாக்கிற்கு சென்ற அஜித்துடன் துணிவு படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியரும் உடன் சென்றிருந்தார். இந்த ஃபோட்டோக்கள் வைரலாகின.

    இந்நிலையில் அஜித் தற்போது பைக்குடன் புனேயில் வலம் வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஃபோட்டோக்களுக்கு லைக்ஸ் குவிகிறது. அஜித் உலகை சுற்றுவது ஒருபக்கம் இருந்தாலும் சென்னையை சூப்பர் பைக்கில் எப்போது சுற்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    பொங்கலையொட்டி விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு நேரடியாக மோதுகிறது. இதனால் பொங்கல் சரவெடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith