ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு வெற்றி... சபரிமலைக்கு சென்ற இயக்குநர் எச்.வினோத்!

துணிவு வெற்றி... சபரிமலைக்கு சென்ற இயக்குநர் எச்.வினோத்!

ஹெச்.வினோத்

ஹெச்.வினோத்

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெற்றி அடைந்திருக்கும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் எச் வினோத் சபரிமலைக்கு சென்றுள்ளார்.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார்.

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் கடந்த 11-ம் தேதி அதிகாலை 1 மணி முதலே திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் ஜிப்ரான் இசையில் வெளியான 3 பாடல்களும் ஹிட் அடித்தது. இதில் அஜித்துடன் சமுத்திரகனி ஜான் கோக்கென், அஜய், தர்ஷன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பால சரவணன், மகாநதி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஆக்சன் ஃபார்முலாவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும் முதல் நாளில் மட்டும் 21 கோடியே 97 லட்ச ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் பொங்கல் விடுமுறையில் மேலும் பல கோடிகளை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்திருக்கும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் சபரிமலைக்கு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எச்.வினோத் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளார். அதன் பிறகு சென்னை திரும்பியபின் கமல்ஹாசன் நடிப்பில் அவர் இயக்கம் புதிய திரைப்படத்தின் வேலைகளை தொடங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Ayyappan temple in Sabarimala, Thunivu