Home /News /entertainment /

சூப்பர் பைக்கை தொடர்ந்து ஹெலிகாப்டரில் பறந்த அஜித்… வைரலாகும் வீடியோ

சூப்பர் பைக்கை தொடர்ந்து ஹெலிகாப்டரில் பறந்த அஜித்… வைரலாகும் வீடியோ

ஹெலிகாப்டரை இயக்கும் அஜித்.

ஹெலிகாப்டரை இயக்கும் அஜித்.

விமானம் மற்றும் ஹெலிகாப்டரை இயக்குவதற்கான பைலட் லைசன்ஸ் இந்திய நடிகர்களிலேயே அஜித்குமாரிடம் மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சூப்பர் பைக்கை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது ஹெலிகாப்டர் ரைடிலும் அசத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளன.

    எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் தற்போது தனது 61-ஆவது படத்தில் நடித்து வருகிறார். வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தற்போது அஜித் இடம்பெறாத காட்சிகளை, வினோத் படமாக்கி வருகிறார். அஜித் குமார் லடாக் போன்ற மலைப்பகுதிகளில் தனது சூப்பர் பைக்கில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தினந்தோறும் வெளியாகும் புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

    உலக சாதனை படைத்தது யார்? - கமல், ரஜினி ரசிகர்களின் இணைய போர்

    வாழ்க்கையை அஜித் அனுபவித்து வாழ்வதாகவும், இளைஞர்களுக்கு அவர் நல்ல ரோல் மாடல் என்றும் அவரது ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.



    இந்நிலையில் சூப்பர் பைக்கை தொடர்ந்து, அஜித் ஹெலிகாப்டரை இயக்கும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்த புகைப்படங்களில் அஜித் சற்று ஸ்லிம்மான தோற்றத்தில் காணப்படுகிறார்.



    விமானம் மற்றும் ஹெலிகாப்டரை இயக்குவதற்கான பைலட் லைசன்ஸ் இந்திய நடிகர்களிலேயே அஜித்குமாரிடம் மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏ.கே. 61 படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அடுத்த கட்டமாக ஹாங்காங் செல்லவுள்ளனர். அங்கு சண்டை காட்சிகள் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith

    அடுத்த செய்தி