ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பல வருடங்களுக்கு பிறகு திரைக்கு வர தயாராகும் த்ரிஷாவின் 3 படங்கள்!

பல வருடங்களுக்கு பிறகு திரைக்கு வர தயாராகும் த்ரிஷாவின் 3 படங்கள்!

த்ரிஷா

த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்பே கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் த்ரிஷா நடித்து முடித்தும் சில பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகாமல் பல வருடங்களாக முடங்கி உள்ளன.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வருடங்களாக முடங்கி இருக்கும் த்ரிஷாவின் மூன்று படங்களை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.

  அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படம் பொன்னியின் செல்வன். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.

  சோழ சாம்ராஜ்ஜியத்தில் அதிகாரம் மிக்க பெண் குந்தவை. சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும், அருள்மொழிவர்மனின் மூத்த சகோதரியும் ஆவாள். சோழர் வரலாற்றில் இளவரசி குந்தவை அளவுக்குப் புகழ்பெற்றவர்கள் அதற்கு முன்பும், பின்பும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அரண்மனை முடிவுகளில் குந்தவை முக்கியமான பங்காற்றுவார். அந்த கதாப்பாத்திரத்தில் த்ரிஷா தனது நடிப்பை பிரமாதகாம வெளிபடுத்தினார் என்றும் விமர்சனங்கள் வந்தது.

  இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்த்தின் வெற்றிக்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் ஏறுமுகமாகி உள்ளது. இந்தப் படத்தின் வெற்றியால் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

  இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்பே கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் த்ரிஷா நடித்து முடித்தும் சில பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகாமல் பல வருடங்களாக முடங்கி உள்ளன. பலமுறை திரைக்கு கொண்டுவர முயற்சிகள் எடுத்தும் நடக்கவில்லை.

  Also read... காந்தார படத்தை பார்த்து பாராட்டிய நிர்மலா சீதாராமன்!

  முன்னதாக த்ரிஷா நடிப்பில் வந்த சில படங்கள் எதிர்பார்த்தபடி வசூல் பெறாததால் 3 படங்களுக்கான வியாபாரத்திலும் இழுபறி ஏற்பட்டதாக பேசப்பட்டது. தற்போது பொன்னியின் செல்வன் வெற்றி காரணமாக பல வருடங்களாக முடங்கி இருக்கும் த்ரிஷாவின் இந்த 3 படங்களையும் அடுத்தடுத்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த செய்தி தற்போது த்ரிஷா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actress Trisha