ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என்ன படம்... என்ன எமோஷன்... டான் குறித்து ரஜினியின் விமர்சனம் - சிபி சக்ரவர்த்தியின் ட்வீட்!

என்ன படம்... என்ன எமோஷன்... டான் குறித்து ரஜினியின் விமர்சனம் - சிபி சக்ரவர்த்தியின் ட்வீட்!

ரஜினிகாந்த் மற்றும் சிபி சக்ரவர்த்தி

ரஜினிகாந்த் மற்றும் சிபி சக்ரவர்த்தி

டான் படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்த், தனது பாராட்டை தெரிவித்துள்ளார். படத்தைப் பார்த்து தான் கண்கலங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  நேற்றைய தினம் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

  லைகா புரொடக்‌ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் டான்.

  கடந்த 13-ம்தேதி வெளியான இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

  முதல் பாதியில் கலகலப்பாக நகரும் கதைக்களம், இரண்டாம் பாதியில் வலுவான எமோஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்ததாக, ரசிகர்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆகியுள்ளது.

  இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களை தொடர்ந்து கேலி செய்து வரும் நிலையில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் திரைப்படமாகவும் இந்த படம் அமைந்துள்ளது.

  Also read... ஜூன் மாதம் ஒடிடியில் வெளியாக உள்ள மாஸ் படங்கள்... இதோ லிஸ்ட்!

  இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். முதல்படம் என்று சொல்ல முடியாத வகையில் சிபி சக்கரவர்த்தி சிறப்பான முறையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். டான் திரைப்படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டிருந்தது.

  இந்நிலையில் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்த், தனது பாராட்டை தெரிவித்துள்ளார். படத்தைப் பார்த்து தான் கண்கலங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சிபி சக்ரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Rajini Kanth, Sivakarthikeyan