முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இளையராஜா கொடுத்த எச்சரிக்கையால் திரைப்படங்களில் நடிக்கவில்லை - பாடகர் மனோ

இளையராஜா கொடுத்த எச்சரிக்கையால் திரைப்படங்களில் நடிக்கவில்லை - பாடகர் மனோ

பாடகர் மனோ, இளையராஜா

பாடகர் மனோ, இளையராஜா

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த சிங்காரவேலன் திரைப்படத்தில் பாடகர் மனோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  நகைச்சுவை கலந்து அவர் நடித்த அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிங்காரவேலன் திரைப்படத்திற்கு பிறகு இளையராஜாவின் எச்சரிக்கை காரணமாகவே திரைப்படங்களில் நடிக்கவில்லை என பாடகர் மனோ தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த சிங்காரவேலன் திரைப்படத்தில் பாடகர் மனோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  நகைச்சுவை கலந்து அவர் நடித்த அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.  ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு பாடகர் மனோ, எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் மிர்ச்சி சிவா நடித்திருக்கும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் மனோ கலந்து கொண்டார்.

அப்போது நியூஸ் 18 சார்பில் அவரிடம் சிங்காரவேலன் திரைப்படத்திற்கு பிறகு இளையராஜா உங்களை நடிக்க வேண்டாம் என்று கூறினாரா அல்லது வாய்ப்புகள் தவறும் என்று கூறினாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மனோ, நீங்கள் நடிக்கச் சென்றால் உங்களுக்காக பாடல் காத்திருக்காது என்று கூறினார். ஏனென்றால் சிங்காரவேலன் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் பாடி கொடுத்தேன்.  அப்போதுதான் இளையராஜா இதனை தெரிவித்தார். அது மிகப்பெரிய எச்சரிக்கையாக நான் எடுத்துக் கொண்டேன் என மனோ தெரிவித்தார்.

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் படத்தில் மனோ மிர்ச்சி சிவாவின் தந்தையாக நடித்திருக்கிறார்.  ஆனால் அது மிக சுவாரசியமான கதாபாத்திரமாக இருக்கும் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.  நேற்று நடைபெற்ற இந்த விழாவில் செண்பகமே பாடலை மனோ மேடையில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ilaiyaraja