ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷாரூக்கானை தொடர்ந்து சல்மான் கானை இயக்கப் போகிறாரா அட்லீ? புதிய தகவலால் பரபரப்பு

ஷாரூக்கானை தொடர்ந்து சல்மான் கானை இயக்கப் போகிறாரா அட்லீ? புதிய தகவலால் பரபரப்பு

சல்மான் கான் - அட்லீ - ஷாருக்கான்

சல்மான் கான் - அட்லீ - ஷாருக்கான்

விஜய்யின் 68ஆவது படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜவான் படத்தை அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஷாரூக்கானை தொடர்ந்து அடுத்ததாக சல்மான் கானை வைத்து அட்லீ படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

  இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ, 2013-ல் வெளியான ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

  ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து விஜய்யுடன் தெரி, மெர்சல், பிகில் படங்களை தொடர்ச்சியாக அட்லீ இயக்கினார்.

  ‘இதயத்தின் இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்து’ – அதிதி ராவுக்காக உருகும் சித்தார்த்…

  இடையே சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய 2 படங்களை தயாரித்தார். தற்போது இந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

  விஜய் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜவான் படத்தை அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  இதற்கிடையே, சல்மான் கானை சந்தித்து அட்லீ கதை கூறியிருப்பதாகவும், அதற்கு அவர் ஓகே சொல்லியிருப்பதாகவம் பாலிவுட்டில் பேசப்படுகிறது. எல்லாம் சரியாகச் சென்றால், இருவரும் விரைவில் இணைந்து படம் பண்ணுவதற்கான அறிவிப்பு வெளிவரக்கூடும்.

  இதேபோன்று விஜய்யின் 68ஆவது படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், அட்லீ – சல்மான் கான் படம் தள்ளிப் போக கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Musthak
  First published:

  Tags: Atlee