ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தேடித் தேடி செல்லும் கூட்டம்.. தீபாவளி படங்களுடன் போட்டி போடும் பொன்னியின் செல்வன்.!

தேடித் தேடி செல்லும் கூட்டம்.. தீபாவளி படங்களுடன் போட்டி போடும் பொன்னியின் செல்வன்.!

சர்தார் - பொன்னியின் செல்வன் - பிரின்ஸ்

சர்தார் - பொன்னியின் செல்வன் - பிரின்ஸ்

சர்தார், பிரின்ஸ் என 2 படங்கள் தீபாவளியையொட்டி வெளிவந்தபோதிலும் பொன்னியின் செல்வன் தமிழகத்தில் சுமார் 200 திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தீபாவளி படங்கள் வெளியான நிலையிலும் பொன்னியின் செல்வனுக்கான ரசிகர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 30-ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. மேலும் தமிழகத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையும் பொன்னியின் செல்வன் நிகழ்த்தியுள்ளது. இந்த படம் வெளியாகி 22 நாட்களைக் கடந்திருக்கிறது.

    மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரின்ஸ்,  சர்தார் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையிலும் பொன்னியின் செல்வன் தமிழகத்தில் சுமார் 200 திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

    ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் திரைப்படம் வெளிவருவது உறுதி… அல்லு அர்ஜுன் அறிவிப்பு

    புதிய திரைப்படங்கள் வெளியான அதே நேரம்,  பொன்னியின் செல்வன் படத்துக்கான வரவேற்பும் குறையாமல் உள்ளது.  குறிப்பாக, சர்தார் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு,  பொன்னியின் செல்வன் படத்திற்கும் இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    இதனால் பொன்னியின் செல்வன் தீபாவளி பண்டிகை விடுமுறை முடியும் சமயத்தில் பிரம்மாண்ட வசூல் இலக்கை எட்டி இருக்கும் என கூறுகின்றனர்.

    தீபாவளியையொட்டி வெளியாகிய சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய படங்களில் பிரின்ஸ் படத்திற்கு கலவை விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. டாக்டர், டான் என அடுத்தடுத்து 2 ஹிட் படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்த நிலையில், பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    தீபாவளிக்கு எது டாப்... பிரின்ஸ் மற்றும் சர்தார் படத்தின் முதல் நாள் வசூல்

    அதேநேரம் சர்தார் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் 2 கேரக்டர்களில் கார்த்தி நடித்துள்ளார். திரைக்கதை விறுவிறுப்பாக இருப்பதாகவும், நீளமான படம் என்றபோதிலும் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படவில்லை எனவும் ரசிகர்கள் சர்தார் படத்திற்கு ரிவ்யூ கூறியுள்ளனர். இந்த படத்துடன் விருமன், பொன்னியின் செல்வன் என ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி பதிவு செய்துள்ளார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan