Home /News /entertainment /

தளபதி 66 -ல் இணைந்த பிரபல தமிழ் நடிகர்... அடுத்த லெவலுக்கு செல்லும் எதிர்பார்ப்பு

தளபதி 66 -ல் இணைந்த பிரபல தமிழ் நடிகர்... அடுத்த லெவலுக்கு செல்லும் எதிர்பார்ப்பு

தளபதி 66 இயக்குனர், தயாரிப்பாளருடன் விஜய்

தளபதி 66 இயக்குனர், தயாரிப்பாளருடன் விஜய்

ஏற்கனவே மெர்சல், சர்கார், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய்யுடன் இந்த பிரபல நடிகர் நடித்திருந்தார்.

தமிழில் மிகவும் பிரபல நடிகராக இருக்கும் ஒருவர் தளபதி 66-ல் இடம்பெற்றுள்ளார். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வழக்கமான விஜய் படங்களைப் போல் வெறுமனே ஆக்சன் மட்டும் அல்லாமல், குடும்பக்கதை, காமெடி, எமோஷன் என சற்று வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டதாக, தளபதி 66 உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக தளபதி 66 உருவாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் எமோஷனலான காட்சிகளுக்கு பெயர்போன வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்குகிறார். புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ள ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

முன்னணி இசையமைப்பாளர் தமனின் இசையில் 2 பாடல்கள் பணி நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் குறைந்த நாட்களில் ஷூட்டிங்கை நிறைவு செய்து விட்டு, தளபதி 66 படக்குழுவினர் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க - ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா... 

சரத்குமார், ஷாம் ஆகியோர் தளபதி 66-ல் இடம்பெற்றுள்ள நிலையில், பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவும் படத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே மெர்சல், சர்கார், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய்யுடன் யோகி பாபு நடித்திருந்தார்.

இதையும் படிங்க - Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

பீஸ்ட் படத்தில் அவருக்கான காட்சிகள் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்ததாக விமர்சனங்கள் உள்ளன. 2, 3 சீன்கள் வந்தாலே ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் திறமை யோகிபாபுவுக்கு உண்டு. அவரை இயக்குனர் வம்சி பைடிபள்ளி சரியாக பயன்படுத்தினால் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க - வசூலில் அமீர் கானின் தங்கல் சாதனையை முறியடித்தது கே.ஜி.எஃப். 2... பாகுபலி 2 வசூலை முந்துமா?

சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம், கலவை விமர்சனங்களைப் பெற்ற போதிலும், தமிழகத்தை பொருத்தளவில் ஓரளவு வரவேற்பை பெற்றது. வலுவான கதை மற்றும் திரைக்கதை இல்லாவிட்டாலும், விஜய் என்ற ஒற்றை மனிதர் படத்தை வெற்றி பெறச் செய்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி