ஆஸ்கர் நாயகர்கள் அடுத்தடுத்து குற்றச்சாட்டு - தென்னிந்திய திறமையாளர்களை பாலிவுட் புறக்கணிக்கிறதா?

ஏ.ஆர் ரஹ்மான் உடன் ரசூல் பூக்குட்டி (கோப்புப்படம்)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து ரசூல் பூக்குட்டியும் பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக இந்தி திரையுலகம் மீது குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் தென்னிந்திய திறமையாளர்களை பாலிவுட் திரையுலகம் புறக்கணிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 • Share this:
  ஹிந்தி திரைப்பட உலகில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத் இன் மரணம் பாலிவுட்டில் திரைமறைவில் நடைபெற்று வரும் வாரிசு அரசியலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

  இந்த சூழலில் அண்மையில் பேசிய ஏ ஆர் ரகுமான் ஹிந்தி திரைப்படங்களில் தான் பணியாற்றக் கூடாது என ஒரு கூட்டம் உழைத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு ஆதரவாக பலரும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், பாலிவுட் இயக்குனரான சேகர் கபூர், ரகுமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

  பாலிவுட் திரையுலகம் தொடமுடியாத உயரத்தை ஆஸ்கர் விருதின் மூலம் ரகுமான் அடைந்ததே அவரை புறக்கணிக்கக் காரணம் என்ன சேகர் கபூர் கூறியிருந்தார். இந்த கருத்தை உண்மையாக்கும் வகையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த இசைக்கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டியும் பாலிவுட் திரையுலகம் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

  ஆஸ்கர் விருது வென்ற பிறகு தமக்கும் வாய்ப்புகள் வருவதில்லை என கூறும் அவர், பாலிவுட்டில் சிலர் தம்மை முகத்திற்கு நேராகவே உங்கள் வேலை எங்களுக்கு வேண்டாம் என தெரிவித்ததாகவும் வருத்தமுடன் தெரிவித்தார்.

  பாலிவுட் சினிமா தொடர்ந்து தென்னிந்திய ஆளுமைகளை புறக்கணித்து வருவதாக நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

  மேலூம் படிக்க... உதவிய வாட்ஸ்அப் - காலையில் கடத்தப்பட்ட குழந்தை மாலையில் மீட்பு

  பாலிவுட் சினிமாவில் இளம் திறமையாளர்கள் முன்னுக்கு வர முடியவில்லை என ரசிகர்கள் ஒருபுறம் குமுறிக் கொண்டிருக்க, தென்னிந்திய பிரபலங்களை முடக்க பாலிவுட் சினிமா முயல்வது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: