முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’’இது நம் நாட்டின் வெற்றி... கனவு மாதிரி இருக்கு..’’ RRR ஆஸ்கர் விருது குறித்து துள்ளிக்குதித்த ராம் சரண்!

’’இது நம் நாட்டின் வெற்றி... கனவு மாதிரி இருக்கு..’’ RRR ஆஸ்கர் விருது குறித்து துள்ளிக்குதித்த ராம் சரண்!

ராம் சரண்

ராம் சரண்

இந்த விருது ஒவ்வொரு இந்திய நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட பார்வையாளர்களுக்கு சொந்தமானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருது வென்ற மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் ராம் சரண், அனைவரும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

95வது அகாடமி விருதுகளில் இந்தியா இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றது. இந்த விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிப்பதாக எம்.எம்.கீரவாணி விருதைப் பெற்றுக் கொண்ட இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்தார். ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் தீபிகா படுகோனால் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு நாட்டு நாட்டு நாட்டு பாடலை பாடினர். அவர்களின் பெர்ஃபார்மென்ஸுக்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு பிரதமர் மோடி, பல மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராம் சரண், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கும் சினிமா ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆர்ஆர்ஆர் இந்திய சினிமா வரலாற்றிலும், எங்கள் வாழ்க்கையிலும் சிறப்பு வாய்ந்த படமாக இருக்கும். ஆஸ்கார் விருதை வென்றதற்காக அனைவருக்கும் நன்றி சொல்ல முடியாது. இப்போது கனவில் வாழ்வது போல் உணர்கிறேன்.

நிறுத்த முடியாத அளவிற்கு ஆதரவையும் அன்பையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி. எஸ்.எஸ்.ராஜமௌலி காருவும், எம்.எம்.கீரவாணி காருவும் நம் இந்தியத் திரையுலகின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள். இந்த தலைசிறந்த படைப்பில் இடம்பெற வாய்ப்பை வழங்கிய இருவருக்குமே நன்றி.

நாட்டு நாட்டு என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு உணர்வு. இந்த உணர்வை ஒருங்கிணைத்த பாடலாசிரியர் சந்திரபோஸ் காரு, பாடகர்கள் ராகுல் சிப்ளிகஞ்ச் & கால பைரவா மற்றும் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கு நன்றி.

இதெல்லாம் இவர் பாட்டா? ஆஸ்கர் நாயகன் எம்.எம்.கீரவாணியின் பிரபல தமிழ் பாடல்கள் வீடியோ!

என் சக நடிகரான தாரக்கிற்கு நன்றி சகோதரா. உங்களுடன் நடனமாடி மீண்டும் சாதனை படைப்பேன் என்று நம்புகிறேன். இனிமையான இணை நடிகராக இருந்ததற்கு நன்றி ஆலியா பட்.

இந்த விருது ஒவ்வொரு இந்திய நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட பார்வையாளர்களுக்கு சொந்தமானது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது நம் நாட்டின் வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: