Home /News /entertainment /

மாஸ்டர், பீஸ்ட்டை தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்திலும் ஜானி மாஸ்டர்!

மாஸ்டர், பீஸ்ட்டை தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்திலும் ஜானி மாஸ்டர்!

ஜானி மாஸ்டர் - விஜய்

ஜானி மாஸ்டர் - விஜய்

ஜானி மாஸ்டர் கிளாஸி டான்ஸ் ஸ்டெப்புகளுக்கு பெயர் பெற்றவர் என்பதும், அவர் தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' மற்றும் 'பீஸ்ட்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார் என்பதும் நாம் அறிந்ததே.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாஸ்டர் மற்றும் பீஸ்ட் ஆகியப் படங்களைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் ஜானி வாரிசு படத்திலும் விஜய்க்கு நடனம் அமைப்பதை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    தளபதி விஜய் தெலுங்கில் 'தளபதி 66' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இதற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் வாரிசு படத்தில் இணைந்துள்ளார்.

    ஜானி மாஸ்டர் கிளாஸி டான்ஸ் ஸ்டெப்புகளுக்கு பெயர் பெற்றவர் என்பதும், அவர் தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' மற்றும் 'பீஸ்ட்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. தற்போது அவர் தனது படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, "வாரிசு படப்பிடிப்பு இடைவேளை நேர கிளிக்குகள்” என தலைப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?

    இப்படம் குடும்பத்தை மையப்படுத்திய கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய ஃபீல் குட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சரத் குமார் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay

    அடுத்த செய்தி