Home /News /entertainment /

லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், உங்களுக்கு என்ன கொடுத்தார் கமல்? – அனிருத் அசத்தல் பதில்

லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், உங்களுக்கு என்ன கொடுத்தார் கமல்? – அனிருத் அசத்தல் பதில்

அனிருத்

அனிருத்

Vikram Movie : விக்ரம் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு விக்ரம் படம் ஓடினாலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் விறுவிறுப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரும்பாலான சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதால் ரிப்பீட் ஆடியன்ஸ் இந்த படத்திற்கு அதிகம் உருவாகியுள்ளார்கள். 10 நாட்களை விக்ரம் திரைப்படம் கடந்துள்ள நிலையில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதேபோன்று விக்ரம் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க - ‘சினிமாடிக்கெட் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ - தயாரிப்பாளர்கள் கோரிக்கை


    எதிர்பாராத வெற்றியை விக்ரம் திரைப்படம் கொடுத்ததால் நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் உற்சாகத்தில் இருக்கிறார். அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் என்ற சொகுசு காரை பரிசளித்துள்ளார்.

    விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சில நிமிடங்கள் திரையில் தோன்றினாலும் சினிமா ரசிகர்களின் மனதில் சூர்யா இடம்பிடித்துவிட்டார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரோலக்ஸ் வாட்ச்சை கமல்ஹாசன் பரிசளித்தார்.

    இந்நிலையில் கேரளாவில் தியேட்டர் விசிட்டிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜும், இசையமைப்பாளர் அனிருத்தும் சென்றனர்.

    விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி ஆறுதல்… குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார்… 

    அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ‘லோகேஷ்க்கு கமல் கார் கொடுத்தார், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் கொடுத்தார். உங்களுக்கு என்ன கொடுத்தார்? ’ என்று அனிருத்திடம் ஒரு செய்தியாளர் கேட்டார்.

    இதற்கு சற்றும் யோசிக்காமல் ‘இசையமைக்க எனக்கு விக்ரம் படத்தை கொடுத்தார்’ என்று அனிருத் பதில் அளித்தார். அவரது இந்த பதில் வைரலாகி வருகிறது.

    கடந்த சில நாட்களாக அனிருத்திற்கு கமல் என்ன பரிசளிப்பார் என்ற ரீதியில் பல கிண்டலான பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Anirudh, Vikram

    அடுத்த செய்தி