5 வருடங்களாக கிடப்பில் இருந்த விஜய் சேதுபதி படம் திரைக்கு வருகிறது

கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார் லிங்குசாமி.

5 வருடங்களாக கிடப்பில் இருந்த விஜய் சேதுபதி படம் திரைக்கு வருகிறது
சீனுராமசாமி மற்றும் விஜய்சேதுபதி
  • Share this:
கொரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் பல வருடங்களாக திரைக்கு வராமல் இருந்த விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளார் லிங்குசாமி.

லிங்குசாமி தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் இடம் பொருள் ஏவல். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2013-ம் ஆண்டு தொடங்கி 2014-ம் ஆண்டு முடிவடைந்தது. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாடல்கள் வெளிவந்தன.

தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு பின்னர் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணி இந்தப் படத்தில் தான் இணைந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக திரைக்கு வராமல் இருந்தது.


இந்நிலையில் கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார் லிங்குசாமி.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் சீனுராமசாமி, “சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல். இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை, இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading