15 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்!

Web Desk | news18
Updated: June 15, 2019, 5:07 PM IST
15 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்!
மாதவன் - சிம்ரன்
Web Desk | news18
Updated: June 15, 2019, 5:07 PM IST
15 வருடங்களுக்குப் பிறகு நடிகர் மாதவன் - சிம்ரன் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ராக்கெட்ரி நம்பி விளைவு. இந்தப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது.

நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராக செயல்பட்டவர். 1994-ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களையும், பாதிப்புகளை 'Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார்.

நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவர் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என்று கூறிய நீதிமன்றம் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மாதவன், கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்துள்ளதாக கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.




வீடியோ பார்க்க: ஆந்திராவின் ஜெயலலிதாவா ரோஜா?

First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...