முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கமலின் விக்ரமை தொடர்ந்து மம்மூட்டி படத்தில் ஏஜெண்ட் டீனா!

கமலின் விக்ரமை தொடர்ந்து மம்மூட்டி படத்தில் ஏஜெண்ட் டீனா!

வசந்தி - மம்மூட்டி

வசந்தி - மம்மூட்டி

மம்முட்டி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க, சினேகா, அமலா பால் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

  • Last Updated :

கமல் ஹாசனின் விக்ரம் படத்தின் ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

நடன இயக்குனராக இருந்து நடிகையான வசந்தி, சமீபத்தில் பான் இந்தியன் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘விக்ரம்’ படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மத்தியில், லோகேஷ் கனகராஜ் வசந்தியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

வசந்தியின் தாக்கம் இப்போது மலையாள சினிமா வரை நீண்டிருக்கிறது. தற்போது அவர், மெகாஸ்டார் மம்முட்டியுடன் புதிய படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பில் அவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி அஜித் சார்... ஏகே 62 இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    அந்த பெயரிடப்படாத த்ரில்லர் திரைப்படத்தை பி.உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார். இதில், மம்முட்டி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க, சினேகா, அமலா பால் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் வினய் ராய், ஷைன் டாம் சாக்கோ, திலீஷ் போத்தன், சித்திக், ஜினு ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள முக்கியமான இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    First published:

    Tags: Mammootty, Mollywood, Vikram